மேகமே மகிமையின் மேகமே இந்த
நாளிலே இறங்கி வாருமே
மேகமே மகிமையின் மேகமே
வந்தால் போதுமே எல்லாம் நடக்குமே
1.
ஏகமாய் துதிக்கும் போது
இறங்கின மேகமே
ஆலயம் முழுவதும்
மகிமையால் நிரப்புமே – மேகமே
2.
வானம் திறக்கணும்
தெய்வம் பேசணும்
நேச மகனென்று (மகளென்று)
நித்தம் சொல்லணும் – மேகமே
3.
மறுரூபமாக்கிடும்
மகிமையின் மேகமே
முகங்கள் மாறணுமே
ஒளிமயமாகணுமே – மேகமே
4.
வாழ்க்கைப் பயணத்திலே
முன்சென்ற மேகமே
நடக்கும் பாதைதனை
நாள்தோறும் காட்டுமே – மேகமே
5.
கையளவு மேகம் தான்
பெருமழை பொழிந்த்து
என் தேச எல்லையெங்கும்
பெருமழை (அருள்மழை ) வேண்டுமே – மேகமே